Saturday 17 December 2011

நிஜம் என்ன??? : Facebook காதல் : தரையில் உருண்டு, புரண்டு கதறினார் : "பென்டிரைவ் மர்மம்" : பண ஆசையில் அவதூறு

காதல் வழக்கில் கைது : கோர்ட் வளாகத்தில் புரண்டு மருத்துவ மாணவி கதறல்
காதல் வழக்கில் கைது செய்யப் பட்ட மருத்துவ மாணவி திருச்சி கோர்ட் வளாகத்தில் நேற்று தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சியில் கரூர் பை பாஸ் சாலையை சேர்ந்தவர் முருகன் (30). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாட்களுக்கு முன் கோட்டை போலீசில் அளித்த புகாரில், கரூரை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்ற அபிநயா தன்னை, முன்னாள் அமைச்சரின் மகள் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்து கொள் ளும்படி மிரட்டுகிறார். பல பணக்கார இளைஞர் களிடம் இணையதளம் மூலம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. எனவே பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுதல், ஏமாற்றி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் அனு ஷாவை(23) கைது செய்தனர். நேற்று மதியம் அனுஷாவை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் அனுஷா திடீரென தரையில் உருண்டு, புரண்டு கதறினார்.
இதைக்கண்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவரிடம் விசாரித்தனர். அனுஷா கூறியது:
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் 2வது மனைவியின் மகள் நான். பிளஸ் 2 வரை கரூரில் படித்தேன். தற்போது சென்னையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். 2 ஆண்டுகள் முழுமையாக முடித்து 3வது ஆண்டு இடையில் நின்றுள்ளேன். அடுத்த ஆண்டில் கல்வியை தொடர திட்டமிட் டிருந்தேன். இதற்கிடையே திருச்சியைச் சேர்ந்த முருகனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முருகன் திருச்சியில் உள்ள பெரிய கட்டுமான நிறு வனத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருவரும் காதலித் தோம். பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பல இடங் களுக்கு சென்றுள் ளோம். அதில் நான் கர்ப்பமடைந்த போது, முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். நான் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளேன். இந்நிலை யில் அவர் என்னை திருமணம் செய்யாமல் தவிர்ப்பதற்காக என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
என்னிடம் உண்மையை கூறாமல், திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சென் னையிலிருந்து வரவழைத் தார். நானும் அதை நம்பி வந்தேன். இங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து, கல்லணை அருகேயுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பிரச்னை செய்யாமல் ஓடிவிடு எனக்கூறி அடித்து மிரட்டினர். அதற்கு நான் ஒத்துக் கொள்ளாததால் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். முருகனும், நானும் காதலித்தபோது எடுத்த போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் பதிவுகள், அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என அவர் கதறினார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஜே.எம்.1 கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி இளங் கோவன் முன் ஆஜர்படுத் தினர். அவரது உத்தர வின்பேரில் அனுஷாவை 15 நாள் காவலில் திருச்சி மக ளிர் சிறையில் அடைத்தனர்.
"பென்டிரைவ் மர்மம்"
அனுஷா கூறும்போது, முருகனை காதலித்தபோது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் விபரம் உள்ளிட்ட ஆதாரங்களை தனது பென்டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் அவரிடமிருந்த வெள்ளை நிற பென்டிரைவினை போலீசார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, �அப்படி ஒரு பென்டிரைவே அந்த பெண்ணிடம் இல்லை� எனக் கூறினர்.
பண ஆசையில் அவதூறு
அனுஷா மீது புகார் அளித்த முருகன் கூறுகையில், எதேச்சையாக ஏற்பட்ட பழக்கத்திற்குபின் எனது இணையதளம் மூலம் என் குடும்ப வசதியை பற்றி அறிந்து கொண்டு அந்த பெண், பணம் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்புகிறார். என்மீது தவறு இருந்திருந்தால் நானே செட்டில்மெண்ட் செய்திருப்பேன். போலீசில் புகார் செய்திருக்கவிட மாட்டேன் என்றார்.    (Dinakaran)

No comments:

Post a Comment