கருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாலூர் பகுதியில் வரும் போது போலீசார் இவரது பைக்கை டார்ச் லைட் காண்பித்து வழி மறித்துள்ளனர். அப்போது கண்களுக்கு நேராக டார்ச் லைட் வெளிச்சம் பாய்ந்ததால் இவர் பைக்கை தாமதமாக சற்று தள்ளி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் போலீசாருக்கும், ஜாண் கென்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலீசார் டார்ச் லைட் டால் ஜாண் கென்ஸ்சின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரது உதடு, கண் புருவம் உள்ளி ட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. படு காயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி ஐரின் கில்டா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனையின்போது
போலிஸ் ரவுடி ஆனால் ரவுடி என்னாவது?
ReplyDeleteசில பேர் காக்கி சட்டை போட்டா தான் ரௌடி தனம் பண்ண முடியும்னு போலீஸ் ஆகுறாங்க... ஆனா ரெம்ப நாள் தாங்காது...
ReplyDeleteenna cheiya namma makkaluku otrumayam kidayathu illanna ippadi nadakkuma neenkal koodankulam incident ill irunthey unkalaukku puriyam. athu avanka problem thane namakku enna athanale thaan intha police ippadi panranunga
Delete