Monday, 16 April 2012

கால்களில் கருங்கல் : குளச்சல் கடலில் மிதந்த சடலம்

35-years-old-man-found-dead-floating-in-colachel-seaகுளச்சல் வெட்டுமடை கடலில் கால்களில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரி யாத சடலம் மிதந்ததை தொடர்ந்து குளச்சல் பகுதியில் மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதியில் நேற்று முன் தினம் சடலம் ஒன்று மிதந்தது.
இதைக்கண்ட மீனவர்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் கால் களில் சுமார் 5 கிலோ எடை கொண்ட கருங்கல் கட்டப்பட்டிருந்தது. அவரது உடலிலும் ஆங்காங்கே காயங் கள் இருந்தன. அவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனத் தெரிகிறது.
குளச்சல் சுற்றுவட்டார பகுதி காவல்நிலையங்களில் மாயமானவர்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment