அணு உலை எதிர்ப்பு பேரணி
அணு உலைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் பேரணி யாக கூடங்குளம் புறப்பட்டு சென்றனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் துவக்கியுள்ளனர். இந்த இயக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதர வாக பைக் பேரணி கோவை யிலிருந்து நேற்று துவங்கியது.
ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பேர் பைக்குடன் திரண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுசி.கலையரசன் பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில் பொன்சந்திரன் (பி.யு.சி.எல்), வக்கீல் முருகேசன், ஆறுச்சாமி, கருப்ப சாமி, தனலட்சுமி, உபேந்திரன், கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை பைக் பேரணி கூடங்குளத்தை அடைகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். நாளை மீண்டும் கோவை திரும்புகின்றனர். இதுபற்றி ஒருங்கிணைப் பாளர் கு.ராம கிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு அறவே லாயக்கற்ற பகுதி. எனவே அங்கு அணுஉலை திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றார். முன்னதாக பைக் பேரணி காந்திபுரத்தில் இருந்து புறப்பட தயாரான போது போலீசார் தடுத்து விட்டனர். இதனால், கோபம் அடைந்த பேரணியில் பங்கேற்க வந்த சிலர் நடுரோட்டில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பைக் பேரணி பொள்ளாச்சி ரோடு எல் அண்ட் டி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டது.
நன்றி : தினகரன் Dec 2
No comments:
Post a Comment