Laughing could kill Her
A young teacher with a rare neurological disorder has been warned she could die if she laughs too hard, because it could push her brain out of her skull.
Carolyn Gibbons, 23, suffers from a condition called Chiari malformation, which means the lower part of her brain is too big. This can block the flow of fluid to her head through her spinal canal.
She endures blurred vision, slurred speech and crippling migraines and any sudden movements feel like her head 'is about to pop'.
Jerking movements, such as during a fit of giggles, could cause her brain to herniate into the top of the spinal column - raising the risk of sudden death.
இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் கவுன்டி ஹைத் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் கரோலின் கிப்பன்ஸ். 23 வயதாகும் இவருக்கு ஒரு விபரீத பாதிப்பு. என்ன பாதிப்பு தெரியுமா? சிரித்தால் உயிர் போய்விடும்.
இங்கிலாந்தின் ஹைத் நகரில் தாய் கேதரின், 2 வயது தம்பி ஜேக்கப்புடன் வசித்து வரும் கரோலின் கிப்பன்சின் உடல்நலம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென பாதிக்கப்பட்டது. பார்வை மங்கியது. பேச்சு குழறியது. அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தது. உட்கார்ந்தால் உடனே எழுந்திருக்க முடியாது. இவ்வளவு ஏன்.. சிரிக்கக்கூட முடியாது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மிக மிக அரிதான ‘சியாரி மால்பார்மேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். பின் மண்டையில் மூளையின் அளவு பெரிதாக உள்ளதால் மண்டையில் போதிய இடமில்லை. இதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல், நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவே இத்தனை கோளாறுகளுக்கும் காரணம் என்றனர். உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த ஜூலையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது. முதுகெலும்பின் ஒரு பகுதியையும் பின்புறம் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்றினர்.
கரோலின் படிப்படியாக குணமாகி வருகிறார். தற்போதும் சில பாதிப்புகள் இருக்கின்றன. அதாவது, வெகு நேரம் தூக்கமே வராது. ஒருமுறை சுமார் 60 மணி நேரம், அதாவது இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்ததாக கரோலின் கூறுகிறார். இப்போதுகூட, வாய் விட்டு சிரிக்க கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள் டாக்டர்கள்.
“சிரிக்க முடியவில்லை என்பதே பெரும் சோகமாக இருந்தது. அந்த நிலையில் இருந்து மெல்ல விடுபட்டு வருகிறேன். முழுமையாக பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளுக்கு நன்றி” என்றார். கரோலின் கிப்பன்ஸ்
No comments:
Post a Comment