Monday, 5 December 2011

டிஜிட்டல் பப்ளிஷிங் பட்ட படிப்பு : அண்ணாமலை பல்கலை அறிமுகம்

அண்ணாமலை பல்கலைக்கழகம், டிஜிட்டல் பப்ளிஷிங் எனப்படும் கணினி வழி பதிப்புதுறை சார்ந்த இளநிலை பட்ட படிப்பை வேலை மற்றும் 100 சதவீத கல்வி உதவி தொகையுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படும் இந்த படிப்பை, சென்னையை சேர்ந்த டிஜிஸ்கேப் கேலரி நடத்துகிறது. இதில் சேரும் தகுதி பெற்ற 40 மாணவர்களுக்கு ஜோவ் இந்தியா என்னும் பன்னாட்டு நிறுவனம், படிப்பில் சேர்ந்த முதல் நாளே முழு நேர வேலை வாய்ப்பை வழங்குவதோடு, அவர்களுக்கான 3 ஆண்டு கல்வி கட்டணமான ரூ.70 ஆயிரத்தையும் ஏற்றுக் கொள்கிறது.
12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களும் பொதுவான பட்டதாரிகளும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். வரும் 10-ம் தேதி சேர்க்கைக்கான கடைசி நாள்.
பட்டப் படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு, கணினி வழியாக நடத்தப்படும். நேர்காணல் மூலம் இறுதி தேர்வு நடக்கும். ஒரு மணி நேரம் நடக்கும் தகுதி தேர்வில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சார்ந்த வினாக்கள் இடம்பெறும். விண்ணப்ப படிவத்தை www.dpub.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 9710938631, 9710938632 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல்களை டிஜிஸ்கேப் கேலரி தெரிவித்துள்ளது. (Tamil Murasu)

No comments:

Post a Comment