Wednesday, 11 April 2012

சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம்


சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.)
சென்னையிலும் உணரப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தா;லைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடல் அலைகளின் சீற்றம் சற்று அதிகமாகவேக் காணப்படுகிறது.


28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment