உடல் எடை குறைப்பதாக ரூ 4 லட்சம் ஏமாற்றி பறித்து விட்டதாக மூலிகை நிறுவனம் மீது பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த பூங்கொடி கணவர் அசோக்குமாருடன் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என் கணவர் கூலி வேலை செய்கிறார். என்னுடைய உறவினர் மூலம் வேளச்சேரியில் உள்ள மூலிகை நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. அந்த நிறுவனத்தினர், "எங்களிடம் மூலிகை மருந்து வாங்கி குடித்தால் உடல் எடை விரைவாக குறையும், இந்த மருந்தை ரூ 2 லட்சம் கொடுத்து நீங்கள் வாங்கினால் மாதந்தோறும் ரூ 13 ஆயிரம் வருமானம் கிடைக்கும். மருந்தின் பயன்பற்றி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் இன்னும் பணம் கிடைக்கும்" என்றனர்.
நானும் என் கணவரும் சேர்ந்து கடன் வாங்கி ரூ 2 லட்சம் கொடுத்து மருந்து வாங்கினோம், 6 மாதம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டும் எந்த பலனும் இல்லை.
அவர்கள் கூறிபடி மாதந்தோறும் எந்த தொகையும் வரவில்லை. பலரும் இதுபோல் ஏமாந்துள்ளனர் என்றார். இதுபோல, சைதாப்பேட்டையை சேர்ந்த சக்தி என்பவர் கமிஷனரிடம் கொடுத்த புகாரில், "என் கணவர் குடி பழக்கத்திற்கு அடி மையானவர். மூலி கை மருந்து குடித்தால் போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என அந்த நிறுவனத்தினர் கூறியதை நம்பி, கடன் வாங்கி ரூ 2 லட்சம் கட்டினேன். ஆனால், அந்த மருந்து குடித்த பிறகு என் கணவர் பித்து பிடித்தவர் போல் ஆகி விட்டார். பணத்தை கேட்டால் மிரட்டுகிறார்கள்" என்றார்.
No comments:
Post a Comment