Tuesday, 15 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 6

காதல் காட்டில்

www.sevai.net.in
காதல் காட்டில் மட்டும்......
மான்கள் வலைவிரிக்க,
வேடர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்...

#############################

காதல்

www.sevai.net.in
காதலும் குழந்தையும் ஒரே மாதிரி ...
 குழந்தை சிரித்தாலும் அழகு ,அழுதாலும் அழகு...

#############################

அப்பா-வின்

www.sevai.net.in
ஒவ்வொரு சிறுவனும் போட்டுப் பார்க்க தவறுவதில்லை...
அப்பாவின் பெரிய காலணியை...

#############################


அப்பா

www.sevai.net.in
ஆய்வு கூடத்தில் அப்பா விட்ட ராக்கெட்டை விட...
அடுத்தவீட்டு கூரைக்கு நான் விட்ட காகித ராக்கெட் அப்பாவுக்கு மிகுந்த குதூகலத்தை கொடுத்தது ...

#############################


கண்ணீர்

www.sevai.net.in
கண்ணீர் எப்போதும் ஒன்றுதான் நாம் தாம் வகைப்படுத்துகின்றோம் ....
ஆனந்தக் கண்ணீரிலும் உப்புக்கரிக்கின்றேதே

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

No comments:

Post a Comment