Wednesday 11 January 2012

அஞ்சுகிராமம் அருகே விளக்கு தவறி விழுந்து பயங்கர தீ குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

அஞ்சுகிராமம் அடுத்த மகாராஜபுரம் அருகே உள்ளது ஹரிதாசபுரம் கிராமம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் சுமார் 25 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனை வரும் கூலி தொழிலாளர்கள். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் இரு மகன்கள் செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன் தினம் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றனர். மகன்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்ற பிறகு செல்லத் துரை மனைவி செல்ல ராணி தனது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தார். விளக்கு அணை யாமல் இருக்க அதிக எண் ணெய் ஊற்றப்பட்டு இருந்தது.


நேற்று (10ம் தேதி) காலை வழக்கம் போல் செல்லத்துரை, செல்வராணி ஆகி யோர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட் டனர். மற்ற வீடுகளில் உள்ளவர்களும் வேலைக்கு புறப்பட்டனர். செல்லத்துரை வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பகல் 2 மணியளவில் திடீரென விளக்கு சரிந்து விழுந்து செல்லத்துரையின் குடிசை வீட்டில் தீ பிடித்தது.
நேரம் செல்ல, செல்ல தீயின் வேகம் அதிகரித்தது. காற்றும் வேகமாக வீசியதால் அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியது. அந்த பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மனைவி மகேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்தார். பயங்கர சத்தம் கேட்டு வீட் டில் இருந்து வெளியே வந்த அவர், கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிலர் வந்தனர். கன்னியாகுமரி தீய ணைப்பு நிலையத்துக் கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. மாவட்ட தீய ணைப்பு அலுவலர் செல்வ ராஜா, உதவி கோட்ட அலு வலர் சரவணபாபு தலைமை யில் கன்னியாகுமரியில் இருந்து தீயணைப்பு துறை யினர் விரைந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் சுமார் 13 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. வேலைக்கு சென்று இருந்தவர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தங்களது வீட்டை பார்த்து கதறி அழுதனர்.
அஞ்சுகிராமத்தை அடுத்த மகாராஜபுரம், ஹரிதாசபுரத்தில் தீயில் எரிந்து சாம்பலான குடிசைகள்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, டி.வி உள்பட பொருட் கள் அனைத்தும் முற்றிலும் எரிந்தது. மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள், புத்தகங்கள், ரேஷன் கார்டு கள், பீரோவில் இருந்த பணம் , நகைகள் உள்ளிட்டவையும் தீயில் நாசமானது. இவற் றின் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக் கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து அறிந்த தும், கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீ சார் விரைந்தனர். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் புரூஸ், கன்னியாகுமரி வருவாய் ஆய் வாளர் தாஸ், மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் அனந்தபாய் மற்றும் கவுன்சிலர்களும் வந்தனர். தீ விபத்தால் அந்த இடமே புகை மண்டலமாக மாறி இருந்தது.
இந்த தீ விபத்தில் செல்லத்துரை, நாராயணவடிவு, சாந்தி, மேரி, மகேஸ்வரி, சுபா, பொன்னமுத்து, அன்னதங்கம், அனந்தம்மாள், தேவி, ஜெயந்தா, லெட்சுமி, சவுரியம் மாள் ஆகியோரின் வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. மேரி, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொள்ள ரூ 60 ஆயிரம் பணத்தை வீட்டில் வைத்திருந்ததாகவும், அதுவும் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் கூறினார். மேலும் பலருக்கு தங்க நகைகள் தீயில் கருகின.

No comments:

Post a Comment