Sunday 5 February 2012

எதுவெல்லாம் குற்றங்கள்? : ஸ்பாட் பைன்


எதுவெல்லாம் போக்குவரத்து குற்றங்களாகும் என்பது பற்றி விவரம்:
  • வாகனப்பதிவு புதுப்பிக்கப்படாமல் இருத்தல், 
  • போக்குவரத்து குறியீடுகளை வேண்டும் என்றே அகற்றுதல் மற்றும் மாற்றுதல், 
  • கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து குறியீடுகளை மீறுதல், 
  • பொதுஇடங்களில் வாகனங்களை அபாயகரமான நிலையில் விட்டு செல்லுதல், 
  • படியில் அல்லது வாகனத்தில் வெளிப்பக்கத்தில் இருந்தபடி பயணிப்பது, 
  • டிரைவருக்கு இடையூறு தரும் விதத்தில் நின்றோ, உட்கார்ந்தோ பயணிப்பது, 
  • பைக்கில் 3 பேர் செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், 
  • போக்குவரத்து போலீஸ் அதிகாரி கேட்கும்போது உரிய லைசென்ஸ் காட்ட மறுப்பது, 
  • ரயில்வே கிராசிங்கில் தடையை மீறி வாகனத்தில் செல்லுதல், 
  • வாகனத்தை வேகமாக ஓட்டுவது, 
  • டிரைவரை அதிவேகமாக ஓட்ட தூண்டுவது, 
  • அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவது, 
  • மனம், உடல் தகுதி இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, 
  • அனுமதி இல்லாமல் ரேஸ் நடத்துவது, 
  • இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, 
  • இன்சூரன்ஸ் இல்லாமல் வணிக போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவது, 
  • அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது, 
  • கூடுதல் பாரத்தை குறைக்க மறுத்தல், அதிகம் பாரம் ஏற்றுதல், 
  • காற்றை மாசுபடுத்துதல், 
  • வாகனம் ஓட்டதெரியாமல் ஓட்டுவது, 
  • விதிகளை மீறிவிட்டு பொய்யான தகவல்களை போக்குவரத்து போலீசிடம் கூறுதல், 
  • அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றுதல், 
  • வாகனப்பெயர் மாற்றாமல் இருத்தல், 
  • வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறுபதிவு செய்யாமல் இருந்தல், 
  • வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு பரிந்துரை செய்துள்ளதுபடி பதிவு எண்களை எழுதாமல் தங்களுக்கு பிடித்த வகையில் எழுதியிருத்தல், 
  • மேலும் தங்களது கட்சி மற்றும் பெயர்களை அவற்றில் எழுதி இருப்பதும் விதி மீறல்தான்.

No comments:

Post a Comment