Thursday 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி அருகே தருவைக்குளம் என்ற இடத்தில், தமிழ்நாடு கடல்சார் கல்லூரி தொடங்க 6 ஹெக்டேர் நிலத்தை மாவட்ட கலெக்டர் ஒதுக்கியுள்ளார். இந்த கல்லூரியில் 360 மாணவர்கள் 4 ஆண்டுகள் அங்கேயே தங்கி படிக்கும் வகையில் விடுதியும் கட்டப்படுகிறது. கடல்சார் கல்லூரி கட்டுவதற்காக ரூ.19 கோடி செலவு ஆகும் என்றும், ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ரூ.2.86 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
திறமையான கப்பல் பணியாளர்களை உருவாக்குவதற்கு, பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் தமிழ்நாடு கடல்சார் கல்லூரி தொடங்க தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் பங்குதாரரை, போட்டி ஏலம் முறையில் தேர்வு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகவல்கள், தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment