ராமுவும், மாறனும் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, இருவரும் விவசாயிகள்.ஒருநாள் மாலை வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் இரண்டு வாத்து குஞ்சுகள் அனாதையாக நின்று எங்களை காப்பற்றுங்கள் என்று கதறின. அதை கேட்ட இருவரும் ஒருகணம் திகைத்து பின் அவற்றை காப்பாற்ற முடிவு செய்தனர். வாத்து குஞ்சுகளில் ஓன்று ஆண், மற்றொன்று பெண். ராமுவும் மாறனும் ஆளுகொன்றாய் பங்கு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். வாத்துக்கள் மகிழ்ச்சியாய் இருவருக்கும் நன்றி சொல்லின
பெண் வாத்தை ராமு எடுத்துகொண்டான். வீட்டில் மற்ற நாட்டு கோழிகளோடு இவற்றை வளர்த்தான். ராமுவின் வாத்து மாறனின் ஆண் வாத்துடன் நட்பாக பழகி எப்பொழுதும் அதனுடனே திரியும்.
ராமுவின் வாத்து முட்டையிடும் பருவம் வந்தது. முதல் நாள் இட்ட முட்டையை பார்த்து ராமு ஆனந்தம் அடைந்தான். தங்க கலரில் தக.. தக.. வென மின்னியது. உடனே மனைவியை அழைத்து விபரம் சொல்லி ரகசியம் காக்க சொன்னான். தங்க முட்டை என்றால் முழுதும் தங்கம் என்று நீங்கள் நினைக்க கூடாது தோடு மட்டும் தங்கம், உள்ளே சாரதாரண முட்டைபோல தான்
வாத்து தினமும் ஒரு தங்க முட்டை இட்டுவந்தது. ராமுவும் வெளியில் யாருக்கும் சொல்லாமல் முட்டையை உடைத்து ஆப்பாயில் ஆம்ப்லேட் என்று சமைத்து சாப்பிட்டு தோட்டை மட்டும் விற்று வந்தான்.
காலம் ஓடியது ஒருநாள் மாலை தங்கம் விற்று விட்டு வீட்டுக்கு வரும்போது வாசலில் மாறன் கையில் அவனது ஆண் வாத்துடன் நின்றான்.
'ராமு கையில் பணம் இல்லை இதை விற்க சந்தைக்கு போகிறேன். உனக்கு வேண்டுமா? ஏதாவது பணம் கொடு இதை வைத்துகொள் என்றான்
ராமு அலட்சியமாக மறுத்து விட்டான் அப்போதுதான் அவனுக்கு யோசனை வந்தது தினமும் கொஞ்சம் தங்கம் கிடைப்பதை விட ஒரேயடியாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்று இந்த வாத்தை கொன்று அதன் வயிற்றில் இருக்கும் எல்லா தங்க முட்டைகளையும் மொத்தமாக எடுக்க வேண்டும் என முடிவு செய்து வாத்தை பிடித்து அறுக்க தயாரானான் .
வாத்து கேட்டது. "என்னை கொல்ல போகிறாயா...ஏன் ? "
'ஆமா ..எனக்கு எல்லா தங்கமும் வேண்டும் "
வாத்து சொன்னது "உனக்கு அறிவே இல்லியா? முன்ன பின்ன கோழி அறுதிருக்கியா? வயிற்றில் அதிகபட்சம் ஒரு முட்டைதான் முழு தோடுடன் இருக்கும். மற்றவை தினசரிதான் தயாராகும் இது தெரியாத வாத்து மடையனா இருக்க!!! தங்க முட்டை இட நான் காரணம் இல்லை. எதிர்த்த வீட்டு ஆண் வாத்துதான் காரணம் " என்றது
திடுக்கிட்ட ராமு மாறனை தேடி ஓடினான்... வேகமாக!!!
வாத்து மனதில் நினைத்தது "லூசு பய! என்ன சொன்னாலும் நம்புறான் எப்பிடியோ நண்பனையும் காப்பாத்தி நானும் தப்பிச்சேன்'
nanum nambiten vaathu madayan
ReplyDelete