கள்ளக்காதலியுடன் 4 மாதத்துக்கு முன் ஓடியவரை, மனைவி தேடி கண்டுபிடித்தார். யாருடன் குடும்பம் நடத்துவது என்பதில் மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் மோதல் ஏற்பட்டதால் பிரச்னை காவல்துறைக்கு சென்றுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஜெயக் குமார். தனியார் பள்ளி ஊழியர். இவரது மனைவி ஆல்பினா. இதே பகுதியை சேர்ந்தவர் செல்சியா மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் இருந்தார். ஜெஸ்டின் ஜெயக்குமாருக்கும், செல்சியா மேரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ஆல்பினா, 2 பேரையும் கண்டித்தார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5ம்தேதி, ஜெஸ்டின் ஜெயக்குமாரும், செல்சியா மேரியும் மாயமானார்கள். இதையடுத்து ஆல்பினா தனது கணவரை காணவில்லை என மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்சியா மேரியை காணவில்லை என அவரது கணவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5ம்தேதி, ஜெஸ்டின் ஜெயக்குமாரும், செல்சியா மேரியும் மாயமானார்கள். இதையடுத்து ஆல்பினா தனது கணவரை காணவில்லை என மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்சியா மேரியை காணவில்லை என அவரது கணவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
கடந்த 4 மாதங்களாக இவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் பள்ளியாடி அருகே உள்ள குன்னம்பாறை என்ற இடத்தில் ஜெஸ்டின் ஜெயக்குமாரும், செல்சியா மேரியும் ஒரு வாடகை வீட்டில் இருப்பது ஆல்பினாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று ஆல்பினா, தனது இரு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் குன்னம்பாறையில் ஜெஸ்டின் ஜெயக்குமார், செல்சியா மேரி இருந்த வீட்டுக்கு சென்றார். தனது மனைவி குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோருடன் வருவதை பார்த்த ஜெஸ்டின் ஜெயக்குமார், வீட்டின் பின் பக்கமாக தப்பி ஓடினார்.
செல்சியா மேரி கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைய முயன்ற ஆல்பினாவை, வெட்டு கத்தியை காட்டி மிரட்டிய செல்சியா மேரி, வீட்டுக்குள் வந்தால் தொலைத்து விடுவேன் என மிரட்டினார். ஜெஸ்டின் ஜெயக்குமார்தான் எனது கணவர். நான் அவருடன்தான் இருப்பேன் என்றார்.
ஆல்பினா, ‘எனக்குதான் அவர் முறைப்படி கணவர். என்னிடம் அவரை ஒப்படைத்து விடு’ என்றார். மாறி, மாறி இருவரும் ஜெஸ்டின் ஜெயகுமாருக்காக குடுமிபிடி சண்டை போட்டனர். அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், ஆல்பினாவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கு மாறு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆல்பினா மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். அதில், தனது கணவரை 4 மாதமாக செல்சியா மேரி கடத்தி வைத்திருக்கிறார். அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவரை மீட்பதற்காக சென்ற என்னை வெட்டு கத்தியை காட்டி மிரட்டி, செல்சியா மேரி தாக்கியதாக ஆல்பினா கூறி உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணைக்கு வருமாறு செல்சியா மேரிக்கும், ஜெஸ்டின் ஜெயக்குமாருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment