‘செம்பட்டை’ 2012 - இல் திரைக்கு வர இருக்கும் திரைப்படத்தின் பெரும்பகுதி அரபி கரையோரம் அமைத்திருக்கும் இயற்கை எழில் மிகுந்த குறும்பனை கிராமத்தில் படமாக்கப்பட்டது. இத்திரைபடத்தில் குறும்பனை கிராமத்தை சார்ந்த இளைஞ்சர்கள் நடித்தும், சிறுவர்கள் ஆடலுடன் நடித்தும் இருக்குகிறர்கள்.
"மீனவ குப்பத்தை தேடி அலைந்த இயக்குனர்." என ஒரு பத்திரிகையின் செய்தி. குப்பம் என்றல் நீங்கள் பொருள் கொள்வது என்ன?. மீனவர்கள் கடலோரம் சிறு குடிசைகள் அமைத்து (நாகரிகமற்று : அப்படித்தானே திரைப்படங்களில் சித்தரிக்கபடுகிறார்கள்)
வாழ்பவர்கள். இந்த கிராமத்தில் 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.
இதோ குறும்பனை கிராமத்தின் அழகை பாருங்கள் : கிளிக் செய்யவும். இந்த கிராமத்தை நீங்கள் "குப்பம்" என்று ஒத்து கொள்வீர்களா??? குறும்பனை கிராமம் மட்டும் அல்ல கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து கடலோர கிராமங்களுமே மிகவும் அருமை. இங்கு குப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. செய்திகள் வெளியிடுபவர்கள் அறிந்து தெரிந்து வெளி இடுவது நல்லது.
மீனவர்கள் பற்றிய கதையை படமாக்க, அழகான மீனவ குப்பத்தை தேடி அலைந்தார் இயக்குனர்.
பாசில், சித்திக், வினயனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஐ.கணேஷ். ‘செம்பட்டை’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
மீனவ குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பி பற்றிய உண்மை கதையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு மீனவ கிராமத்தில் கதையை படமாக்க விரும்பவில்லை. கதையுடன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக அழகான மீனவ கிராமங்களை தேடினேன். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களை பார்த்தும் பிடிக்கவில்லை. இறுதியாக நாகர்கோவில் கடற்கரை கிராமத்தை தேர்வு செய்தேன். குளச்சல், குறும்பனை, தொண்டி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்தது. கூத்துப்பட்டறையில் பயின்ற எம்.பாலா ஹீரோ. கேரளாவை சேர்ந்த கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், மலையாள படங்களில்கூட நடித்ததில்லை. இவருடன் தனுஸ்ரீ என்ற மற்றொரு ஹீரோயினும் நடிக்கிறார். ஒளிப்பதிவு சலீம். இசை ஸ்ரீராகவ்.
No comments:
Post a Comment