நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அந்த கட்டிடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியும் காவல்துறையினர் பெற்று இருந்தனர்.
நேற்று (ஞாயிறு) மதியம் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து 4 வாலிபர்கள் உல்லாசமாக இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் கண்மணி, பிரேமா மற்றும் போலீசார் அதிரடியாக அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.
இந்த கட்டிடம் 3 தளங்களை கொண்டதாகும். கீழ் தளத்தில் ஒரு கடையும், மேல் தளத்தில் கிளினிக்கும் இருந்தது. 3&வது தளத்தில் ஒரு அலுவலகம் உள்ளது. 3&வது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 4, 5 அறைகள் இருந்தன. அவற்றில் சோதனை செய்த போது விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜன் (51), குலசேகரம் செருப்பாலூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (35), பார்வதிபுரத்தை சேர்ந்த இனிகோ (50), கோவில்பட்டியை சேர்ந்த மணிகண்ட பார்த்தீபன் (29) ஆகியோரையும், அவர்களுடன் இருந்த குமாரபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 33 வயது பெண், குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான பெண்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள்.
கைதான 7 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சேம் டேவிட்சன் என கூறப்படுகிறது. தற்போது அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விபசாரம் நடந்து வந்ததாக கூறப்பட்ட கட்டிடம் நாகர்கோவில் & திருவனந்தபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. 2&வது தளத்தில் கிளினிக் உள்ளது. 3-வது தளத்தில் உள்ள அலுவலகத்தில் தான் விபசாரம் நடப்பதாகவும், அடிக்கடி ஏராளமான ஆண்களும், பெண்களும் சென்று வந்ததாகவும் தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் மாறு வேடங்களிலும் அவ்வப்போது அந்த அலுவலகத்தை கண்காணித்தனர். ஏற்கனவே 2 முறை சோதனைக்கு சென்ற போது, பெண்கள் யாரும் இல்லை. இதனால் விபசாரம் நடப்பதை உறுதிப்படுத்த முடிய வில்லை. இந்த நிலையில் நேற்று விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தி 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் தான் போன் செய்து அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கைதானவர்கள் கூறி உள்ளனர். இதன் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதன் பின்னணியில் ஏராளமான புரோக்கர்களும் உள்ளனர். அவர்கள் தான் வெளி மாவட்டங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களையும் பிடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.
விபசாரம் நடந்த அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து சென்ற ஆண்களும், பெண்களிடம் கீழ் தளத்தில் உள்ளவர்கள் கேட்கும் போது மேலே உள்ள அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு வந்து இருக்கிறோம் என கூறுவார்களாம். காலையில் இருந்து மாலை வரை டிப் டாப் உடையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து செல்வார்கள். அவர்களை பார்த்தால் விபசாரத்துக்கு வந்தது போலவே இருக்காது என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment