Tuesday, 24 April 2012

ஸ்மார்ட் ரேஷன் கார்டு : முறைகேடுகள் களையப்படுமா?

பேரவையில் நேற்று உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தகுதியான குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 4,20,747 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
tamil_nadu_ration_cardதற்போதுள்ள 1,97,82,593 ரேஷன் கார்டுகளின் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி 1 கோடியே 93 லட்சத்து 3,509 கார்டுகள், அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புதுப்பிக்கப்பட்டன. 85,159 பேர் ஆன்லைன் மூலமும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 62,159 பேரும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துள்ளனர். 23,000 கார்டுகளின் பதிவுகள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் 4 லட்சத்து 16,925 கார்டுகள் புதுப்பிக்கப்படவில்லை.
கடந்த மார்ச் இறுதி வரை 27 349 கார்டுகள் போலி என கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள நடைமுறையில் ஒரே நபர் பல இடங்களில் அவரது பெயரை பதிவு செய்து ரேஷன் கார்டு பெறுவதை கண்டுபிடித்து தடுக்க சரியான வழிமுறைகள் இல்லை.
இதுபோன்ற முறைகேடுகளை களைய, உடற்கூறு பதிவு முறையில் எலக்ட்ரானிக் ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் பதிவு அமைப்பின்கீழ் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குனர், மக்களின் 10 விரல் கைரேகைகள், கருவிழியை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி எலக்ட்ரானிக் ரேஷன் கார்டு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க முடியும். இதற்கு ரூ.703.21 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்து, மத்திய அரசின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

1 comment:

  1. Yami immigration is a well-known and experienced Ielts/PTE classes in surat. We provide Immigration Services for many countries such as Italy, Canada, France, Australia, Germany, USA, Malaysia, New Zealand, and Singapore.

    ReplyDelete