Wednesday, 30 November 2011

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் : ஜிம்பாப்வே பெண்களிடம் தீவிர விசாரணை

தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள் நடத்தும் பெண் கும்பல் ஒன்று ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வலுக்கட்டாயமாக விந்து எடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
தனியாக செல்லும் ஆண்களை மயக்கி அல்லது தாக்கி அந்த பெண்கள் பலாத்காரத்தில் ஈடுபடுவதாகவும் பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி புதர்களில் வீசிவிட்டு தப்பிவிடுகின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பெண்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோர்ட்டில் வழக்கு விசாரணை தீவிரமாக நடக்கிறது. பாலியல் தொழிலாளர்களான தங்கள் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக 3 பெண்களும் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment