Wednesday, 30 November 2011

இன பெருக்க காலம் துவங்கியதால் தின்பண்டம் கொடுக்க தடை :

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் இந்த குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். கர்ப்ப காலம் 170 நாட்கள்.
ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடையே தாவி செல்வது அழகாக இருக்கும்.
வால்பாறை & பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் இவை அதிகமாக உள்ளன. இந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இவற்றுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழக்கியுள்ளனர். எனவே உணவுப் பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தில், வாகனங்களை எதிர்பார்த்து இவை காத்திருக்கின்றன. குரங்குகள் வாகனத்தில் தாவும்போது, அடிபட்டு இறப்பது அடிக்கடி நடக்கிறது.
இதை தடுக்க, ஊழியர்களை வனத்துறை நியமித்துள்ளது. சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடம் எச்சரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment