(3.11.11) விழுப்புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, தொழில் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 20 குழுக்களின் பெயர்களை போலியாக தயாரித்தும், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து 1.04.2008 அன்று முதல் 31.12.2010 வரை ரூ.8 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவிகள் ஜெயபாரதி, லட்சுமி, சித்ரா, மீனாட்சி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகள் 6 பேர் மற்றும் ஒரு பெண் ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment