Saturday, 3 December 2011

நாகர்கோவிலில் தொடரும் சோகம் : பெண் படுகொலை : சுடுகாட்டில் உடலை வீசிச்சென்றனர்

(3.11.11) நாகர்கோவில் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கும்பல், சுடுகாட்டில் உள்ள புதரில் அவரது உடலை வீசி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அடுத்த தாழக்குடி & திருப்பதிசாரம் செல்லும் சாலையில் தாழக்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள புதரில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக இன்று காலை ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆடைகள் களையப்பட்டு அலங்கோலமான நிலையில் உடல், புதருக்குள் திணிக்கப்பட்டு இருந்தது.
கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. மேலும் உதடு, காது மற்றும் முகத்தில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. கழுத்தை இறுக்கியும், அடித்தும் இவரை கொலை செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சுடுகாடு இருக்கும் பகுதியில் வைத்து உடலை எரிப்பதற்கு கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், நேற்று இரவு முதல் பெய்த மழையால் அவர்களின் திட்டம் நிறைவேறாமல் போய் இருக்கிறது. இதனால் புதருக்குள் உடலை திணித்து வைத்து இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தையும், பெண்ணின் உடலையும் எஸ்பி லட்சுமி இன்று பார்வையிட்டார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.       (Tamilmurasu) 

1 comment:

  1. ithu panathirhaga nadantha oru koduuram.
    panam eppadi ellam manitha vazhkaiyil vilaiyaduthu.........

    ReplyDelete