முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘முல்லை பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். வந்தாரை வாழவைக்கும் தமிழக மண்ணுக்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் வாழும் மலையாளிகளாகிய நாங்கள் தமிழக மக்களோடு இணைந்து போராடுவோம என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்‘ என்றும் இதற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். அதன்படி இன்று மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் டீக்கடைகள், பேக்கரி கடைகள், நகைக்கடைகள், எலெக்டரிக்கல் கடைகள் என 500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment