Thursday, 8 December 2011

குமரி & கேரள எல்லையில் அமைதி : முல்லைபெரியாறு விவகாரம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தில் எல்லை பகுதிகளில் வாகனங்கள் இயக்குவதில் பாதுகாப்பற்ற நிலை தொடருகிறது. பல பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல இயலாமல் பாதி வழியில் திரும்பி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மற் றொரு தமிழக கேரள எல்லை பகுதி யான குமரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. ஒரு சில சம்பவங்களை தவிர பெரும்பாலும் எந்தவித பாதிப்பும் இல்லை. 
சபரிமலை சென்றுவிட்டு சுசீந்திரம், கன்னியாகுமரி நோக்கி வருகின்ற வாகனங்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதிகளில் பல இடங்களிலும் பிரச்னைகள் நீடிப்பதால் குமரி மாவட்டம், திருவனந்தபுரம் வழியாக அதிக அளவில் கேரள வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தமிழக பகுதிக்கு வந்து செல்கின்றன. இத னால் தேசிய நெடுஞ்சாலை 47 போக்குவரத்து நெரிசலுடன் திணறி வரு கிறது. இரவு நேரங்களில் மார்த்தாண்டம், நாகர்கோவில் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறு கிறது.

No comments:

Post a Comment