Wednesday, 7 December 2011

தூத்தூர் கிராமத்தில் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை : வீதியில் கொட்டி தீ வைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவர் கிராமத்தில் கேன்சர் நோயை உருவாக்கும் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர். இதையெட்டி இன்று காலை ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ், பாதிரியார்கள் சனு, எபிரேன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள், பான்பராக் மற்றும் பாக்கு வகை களை எடுத்து வீதியில் குவித்து தீ வைத்து கொளுத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ் கூறியதாவது, தூத்தூர் ஊராட்சியில் புகையிலை பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாக்கு வகைகள் விற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக தூத்தூர் கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்படியாக மற்ற இடங்களு க்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு சுயஉதவிக்குழுக்கள், பாதிரியார்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தூத்தூர் ஊராட்சி பகுதியை இதில் முன்மாதிரியாக மாற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment