Tuesday, 24 January 2012

புத்தகப்பை, கணித உபகரண பெட்டி வழங்க அரசு உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், மேப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்கு தேவையான கணித உபகரணப் பெட்டிகள், கிராம மாணவர்களுக்கு வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேனிலைக் கல்வி இணை இயக்குநர் அரசுக்கு செலவின விவரங்களை அனுப்பி வைத்தார். மேலும் 2012&2013ம் கல்வி ஆண்டு முதல் வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.
புத்தகப் பைகள்:
1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய அளவும், 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்புவரை நடுத்தர அளவும், 8 முதல் 12ம் வகுப்பு வரை பெரிய அளவும் கொண்ட பைகள் வழங்கலாம். இந்த மூன்று அளவுகள் கொண்ட புத்தகப் பைகளின் விலை ரூ 75,  ரூ  100,  ரூ  125 என்ற மதிப்புகளில் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
கணித உபகரணப் பெட்டி (ஜாமின்ட்ரிபாக்ஸ்):
6 முதல் 10ம் வகுப்பு வரை படிப்போருக்கு தலா ஒரு ஜாமின்ட்ரி பாக்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். ரூ 35 மதிப்பில் 46 லட்சத்து 1572 பேருக்கு இந்த பாக்ஸ் கிடைக்கும்.
கலர் பென்சில்:
1 மதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலர் பெனசில் பாக்ஸ் ஒன்று ரூ 20 வீதம் 35 லட்சம் பேருக்கு வழங்கப்ப டும்.
புவியியல் வரைபடங்கள்:
முதற்கட்டமாக 6 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 2013&2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். ஒரு வரைபடத்தின் விலை  ரூ  50 மதிப்பில் 46 லட்சத்து 1572 பேருக்கு வழங்கப் படும்.

No comments:

Post a Comment