தமிழ்நாட்டில் வரும் மே, ஜூன் மாதங்களில் காற்றாலை மூலம் 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு மொத்த மின் தேவை விட, மின்பற்றாக்குறை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை காலத்திற்கு முன்பே வெயில் அடிக்க தொடங்கி விட்டது. இதனால் மின்தேவை 1500 மெகா வாட் வரையில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மின்பற்றாக்குறை பிரச்சனை தலைவிரித்து ஆடும் வேளையில், தற்போது அதிகரித்துள்ள மின்தேவை எவ்வாறு சமாளிப்பது என்று மின்வாரியம் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளனர். உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதா, வெளிமாநிலங்களில் இருந்து இருப்பதை விட அதிகம் மின்சாரம் வாங்குவதா என்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மின்வாரியத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அடுத்தது காற்றாலை மின்உற்பத்தி உள்ளது. வரும் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரையில் காற்றாலை மின்உற்பத்தி கிடைக்கும். மின்வாரியம் இதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்தது தினந்தோறும் 2,500 மெகா வாட் வரையில் மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் நம்பிக்கையில் உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் வரும் மே முதல் செப்டம்பர் 15ம் தேதி வரையில் அதிகமாக காற்றாலை கிடைக்கும். இதன் மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின்உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,000 மெகா வாட் அளவுக்கு நிறுவப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 2,500 மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கும். இதனால் மின்பற்றாக்குறையை ஓரளவுக்கு போக்க முடியும்’’ என்றனர்.
No comments:
Post a Comment