Thursday, 16 February 2012

கள்ளக்காதலியுடன் சுற்றிய மருமகன் : மாமனார், மாமியார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன், வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபருக்கு சொந்தமான காரில் இவர்கள் உல்லாசமாக உலா வர தொடங்கினர்.
இவர்களுக்கு இடையிலான கள்ளக்காதல், அரசல், புரசலாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்து, பின்னர் வாலிபரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோரிடம் சென்று முறையிட்டார். கணவர், கள்ளக்காதலி வைத்து இருக்கிறார். அவளோடு காரில் உலா வருகிறார். நான் இனி அவருடன் வாழ மாட்டேன் என்றெல்லாம் கூறினார். மகளின் வாழ்க்கையை எண்ணி கவலைப்பட்டவர்கள், தனது மருமகனிடம் இது குறித்து பேசினர். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணையும் அழைத்து ஒரு குடும்பத்தை கெடுக்க கூடாது. நீ ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்தவள். உனக்கு விருப்பம் இருந்தால் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொள். எனது மகள் வாழ்க்கையை சீரழித்து விடாதே என்றெல்லாம் கூறி பார்த்தனர். ஆனால் இவர்களின் கள்ளக்காதல் முடிவுக்கு வர வில்லை.
இதனால் இவர்கள் இருவரையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். நேற்று இரவு தனது கள்ளக்காதலியுடன் காரில் ஏறி செல்ல முயன்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரை அவரது மனைவி குடும்பத்தினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கோட்டாறு போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடந்தது. சம்பந்தப்பட்ட கள்ளக்காதலியையும் அழைத்து வந்து விசாரணை நடந்தது. இனிமேல் இது போல் நடக்க கூடாது என அறிவுரை கூறினர்.

No comments:

Post a Comment