Thursday 16 February 2012

ஒரே பள்ளியில் / மாதத்தில் 2வது சம்பவம் : மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

உடுமலை பள்ளி விடுதியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனது தற்கொலைக்கு பொருளாதார ஆசிரியரே காரணம் என அதில் எழுதப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 1,160 மாணவர்கள், 450 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடைக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் மகன் அனுஜ் (16), விடுதியில் தங்கி பிளஸ் 1 வகுப்பு படித்தான். அவனது தம்பி ஆகாஷ் 9ம் வகுப்பு படிக்கிறான்.
நேற்று காலை விடுதியில் உள்ள மருத்துவ பரிசோதனை அறையில், மின்விசிறியில் அனுஜ் தூக்கில் தொங்கினான். இதைப் பார்த்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில், மாணவன் தூக்கில் தொங்கிய தகவல் அறிந்து, மற்ற மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் பள்ளி முன் திரண்டனர். ஏற்கனவே, இதே பள்ளியில் கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாணவன் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரும், உறவினர்களும் மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு மாணவன் இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பள்ளி முன்பு டிஎஸ்பி செந்தில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். டிஎஸ்பியுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். �ஏற்கனவே ஒரு மாணவன் இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது இன்னொரு மாணவன் இறந்துள்ளான். சாவில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.
டிஎஸ்பியின் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் டிஎஸ்பி செந்தில் தடுமாறி விழுந்தார். மாணவன் சடலத்துடன் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்ட ஆம்புலன்சை மக்கள் மறித்த னர்.
பின்னர் மக்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடியடி நடத்தப்படும் என போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
மாணவன் சாவு குறி த்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவன் அனுஜ் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவின் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கேரளா சென்றிருந்ததால் தாமதமாக வந்து கதறி அழுதனர். உறவினர்களும் திரண்டனர்.
பள்ளிக்கு விடுமுறை:
மாணவன் சாவை தொடர்ந்து பள்ளிக்கும், அதே வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. எஸ்.பி பாலகிருஷ்ணன், ஆர்டிஓ ஜெயமணி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, ஏஎஸ்பி விக்ரமன்ஆகியோர் அங்கு வந்து விசாரித்தனர். பதற்றம் நிலவியதால் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவன் சாவுக்கு காரணமாக ஆசிரியர் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
"இறந்தால் ரூ 5 லட்சம் தருவேன்"
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அனுஜ், அவரது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் இறந்ததற்கு காரணம் பொருளாதார ஆசிரியர் பி.மகேஸ்வரன் தான். ஆசிரியர் என்னை மிரட்டி `நீ இறந்து விட்டால் உன் வீட்டுக்கு ரூ 5 லட்சம் தருவேன் என்றார். அதற்கு நான் கூறினேன், அப்படி இறக்க முடியாது என்றேன். அதற்கு அவர் என் காதுக்கு மேலே உள்ள முடியை பிடித்து ஆட்டி என்னை அடித்து அவர் இவ்வாறு செய்ய வைத்தார்.
இவ்வாறு கடிதத்தில் அனுஜ் எழுதி இருக்கிறான்.
நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள்:
இன்னொரு பேப்பரில் உள்ள செய்தியை யாரிடமும் ஒப்படைக்காதீங்க. என் தம்பிக்கிட்டேயோ அல்லது பெற்றோரிடமோ தந்து விடுங்கள். உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் இருந்து கொள்ளுங்கள். நான் எங்கேயாவது தான் பிணமாக கிடப்பேன். முக்கியமாக சிக் ரூமில் பாருங்கள். என்னுடைய ஒரேயொரு வேண்டுகோள், இதை எப்படியாவது பெரிய பிரச்னையாக செய்யுங்கள். சும்மா விடாதீங்க.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளான்.

No comments:

Post a Comment