குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (55) இவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட், சிலுவைதாசன் ஆகியோருடன் அந்தமான் பகுதியில் விசைபடகில் மீன்பிடித்து வந்தார்.
ஜனவரி 1ந்தேதி கோடி முனையில் இருந்து அந்தமானுக்கு சென்ற அவர் அங்கு தங்கி மீன் பிடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடித்து கொண்டு இருந்த போது கடலில் தவறிவிழுந்து இறந்தார். இது பற்றி அவருடன் மீன் பிடித்தவர்கள் நேற்று அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அந்தமான் கடலில் தவறிவிழுந்த என் கணவர் ஜெபஸ்டின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.
No comments:
Post a Comment