Wednesday 8 February 2012

மூங்கிலில் ஸ்மார்ட் போன் : இங்கிலாந்து மாணவர் படைப்பு


மூங்கிலில் ஸ்மார்ட் போன் உருவாக்கி இங்கிலாந்து மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் ப்ராடக்ட் டிசைனிங் படிப்பவர் கிரோன் ஸ்காட் உட்ஹவுஸ் (23). லண்டனின் ஷெப்பர்ட்ஸ் புஷ் பகுதியில் வசிக்கிறார். இவர் மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளார். இதுபற்றி உட்ஹவுஸ் கூறியதாவது:
ஸ்மார்ட் போன்கள் எண்ணிக்கை, உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் வடிவம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இதில் ஏதாவது புதுமை படைக்க திட்டமிட்டேன். அதன் முயற்சியே மூங்கில் போன். இதற்காக தேர்வு செய்யப்படும் மூங்கில் மிகவும் இளசாகவோ, முற்றியதாகவோ இருக்க கூடாது. சுமார் 4 ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலை பயன்படுத்தி ஸ்மார்ட் போனை உருவாக்கியிருக்கிறேன்.
நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதால், மூங்கிலை பதப்படுத்தியுள்ளேன். ‘ஏடீ ஜீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இது ஆன்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தில் செயல்படும். ஐபோன் அளவில் பாதியளவே இருக்கும். மற்ற ஸ்மார்ட் போன்கள் போல, இதிலும் உயர் தொழில்நுட்ப கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. ரிங் ப்ளாஷ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பம் இதுவரை எந்த செல்போனிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வடிவமைப்பு பார்பவர்களை நிச்சயம் கவரும். அதிக கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இது நீண்ட நாள் உழைக்கும். இந்த ஆண்டு கடைசியில் முறைப்படி அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

No comments:

Post a Comment