ஓர் கடலோர கவிதை
கண்ணாடியிலும் உன் முகம்
கருக்காடியிலும் உன் முகம்
பறக்கும்
புல்லிலும் உன் முகம்
பூவாலனிலும் உன் முகம்
கைகள் கருக்காடிகளை பொறுக்கினாலும்
மனசு என்னவோ! உன்னை சுற்றியே பறக்கிறது
சுருக்கென குத்தும் கருக்காடி முள்ளை போல்
அடிக்கடி நெஞ்சில் குத்துகிறது - உன் நினைவு
புழுக்களின்
கூரிய முட்களுக்கிடையில்
புதைந்து விட்ட ஒற்றை கருக்காடி போல்
உன்னின் கூரிய சொற்களால் குதறப்பட்டு
உன் நினைவு முட்களில் புதைந்து கிடக்கிறேன்.
தெரிந்து எடுப்பதும்
தெள்ளி என தள்ளுவதும்
அன்பே - உன் கையில்
by : குறும்பனை அருள்
(குமரி கடலோர சொற்கள் சில : கருக்காடி & பூவாலன் = சிறிய வகை இறால் ; தெள்ளி : Waste )
No comments:
Post a Comment