கிழக்கு சீமையிலே, கடல்பூக்கள், தமிழ்ச்செல்வன் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ரத்னகுமார். செங்காத்து பூமியிலே என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர் கூறியதாவது:
பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறேன். செங்காத்து பூமியிலே கதையை எழுதி பாரதிராஜாவிடம் இயக்க கேட்டபோது அவர் கைவிட்டுவிட்டார். பின்னர் இப்படத்தை நானே தயாரித்து இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஏற்கனவே பெரிய நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஹீரோ என்றால் கை, கால் அமுக்கிவிடும் அளவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். முகத்துக்கு நேராக கால்போட்டுதான் ஹீரோயின் உட்கார்வார். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். இந்த அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. பட்ட அவமானம் போதும் என்ற முடிவுக்கு வந்து, இப்படத்துக்கு புது நடிகர், நடிகைகளை தேர்வு செய்தேன். இந்த படத்துக்கு அப்புறம் நான் மீண்டும் இயக்குவேனா, இல்லையா என்பது தெரியாது.
‘செங்காத்து பூமியிலே’ ஒரு உண்மை சம்பவம். கிராமத்து பாசம், நேசத்தை உள்ளடக்கியது. பவன், செந்தில், சிங்கம்புலி, பிரியங்கா, சனுலட்சுமி நடித்துள்ளனர். இளையராஜா இசை.
No comments:
Post a Comment