பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் திருமணம் ஆன தனியார் நிறுவன ஊழியரான சரத்குமாரை ஜோதிகா தனக்கு திருமணமாகி கணவர் கொடுமையில் தவிப்பதாக கூறி ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று காதலன் உதவியுடன் பணத்தை பறிப்பார். உண்மை தெரிந்து சரத்குமார் ஜோதிகாவை தண்டிப்பார். இதேபோல் குமரியிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சினேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஊனமுற்ற இவர் இசைக்கலைஞர். இவர் இசையமைக்கும் கச்சேரிக்கு அடிக்கடி மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஷீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வந்து சென்றுள்ளார். அப்போது காதல் தீ (?) பற்றியது.
தன்னை அனாதை என ஷீபா அறிமுகம் செய்துள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி உள்பட பல இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அப்போது ஷீபா தன்னை வெளிநாட்டிலிருந்து ஒருவர் தத்தெடுத்துள்ளார். அந்த பணத்தை இங்கு கொண்டு வர சிறிது பணம் கட்டவேண்டும் எனக்கூறி லட்ச கணக்கில் பணம் பெற்றாராம். மேலும் வீட்டில் இருந்த செயின் மற்றும் கைச்செயின் போன்றவற்றை ஷீபா எடுத்து சென்றாராம்.
மேலும் துணை சுகாதார நிலையம் ஒன்றில் நர்சாக பணிபுரிவதாக கூறி அங்கு தினமும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சினேக் பதிவு திருமணம் செய்வோம் எனக்கூறி அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார். அப்போது ஷீபா தன்னை வளர்த்த பெரியப்பா வீட்டில் அண்ணன் முறை கொண்டவரால் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பிறந்ததாகவும், அதனை விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை பலரும் சீரழித்து விட்டதாக கூறி தன் மீது வெறுப்பு வரும் வகையில் பேசினாராம்.
இதை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த அவர் சில உறவினர்களுடன் வந்து தான் 2 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், தான் கேட்ட பணத்தை தராவிட்டால் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் தருவேன் எனக்கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சினேக் பதிவு திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு தன்னை விட்டால் போதும் என ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் ஷீபா தரப்பினரோ நீ ஓடு ஆனால் பணத்தை கொடுத்து விட்டு போ அல்லது குடும்ப மானத்தை வாங்கி விடுவோம் என மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்தால் தனது வீட்டில் சிக்கல் ஆகிவிடுமே என் பரிதவிப்பில் தனது இசைக்கலைஞர்களிடம் புலம்பி வருகிறார்.
தற்போது வழக்கறிஞர்கள் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஷீபா அழைப்பு விடுத்துள்ளதால் பதறிப்போயுள்ளார்.
No comments:
Post a Comment