Saturday, 25 February 2012

கூடங்குளம் : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியும், மக்கள் போராளி உதயகுமார் சவாலும்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பேட்டியில், “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அங்கு நடக்கும் தொடர் போராட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டு வருகின்றன. எரிசக்தி துறையில் இந்தியா முன்னேறுவதை இவை விரும்பவில்லை” என்று திடுக்கிடும் தகவலை கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், பிரதமர் முதல்முறையாக இதுபோன்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
பிரதமரின் பேட்டி குறித்து மக்கள் போராளி உதயகுமார் கூறுகையில் "பிரதமரின் பேட்டி உண்மையற்றது என்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று நிரூபிக்க பட்டால் தனி பட்ட முறையில் தூக்கு தண்டனையை ஏற்க தயார்" என தெரிவித்துள்ளார்.


பாஜ மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி அளித்த பேட்டியில், “பிரதமர் கூறியிருப்பது மிகவும் முக்கியமான தகவல். பிரதமர் இப்படி கூறியிருப்பதால், அது பற்றிய உண்மைகளை நாட்டு மக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், மக்கள் இப்பிரச்னையில் முழு விவரத்தை தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், “கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடந்தையாக இருந்தால், அவற்றுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இருந்தால், பிரதமர் இதுபோல் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதை விட்டு விட்டு, கூடங்குளம் மக்களிடம் உண்மையை எடுத்து கூற வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment