Thursday, 1 March 2012

மாலத்தீவு பகுதியில் குமரி மீனவர்கள் 11 பேர் கைது

ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து குல்டுசுசி தீவில் சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜெரீன் ஆண்றோ. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 23-ம் தேதி இரவிபுத்தன்துறையில் இருந்து, ஜெரீன் ஆண்டோ மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் ஆண்டனி, ததேயூஸ், அந்தோணி அடிமை, மரியதாசன், ஜோசப் லிபின், ஆரோக்கியதாஸ், நிக்கோலஸ், ஜாண்பிரபு மற்றும் பூத்துறையைச் சேர்ந்த அஜீஸ், முள்ளூர் துறையைச் சேர்ந்த பிஸ்மோன் ஆகிய 11 பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து அங்குள்ள குல்டுசுசி தீவில் சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து படகு உரிமையாளர் ஜெரீன் ஆண்டோ ஆழ்கடல் மீன்பிடிச்சங்க செயலாளர் என்சிலோமுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர், எம்பி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆகியோருக்கு என்சிலோம் தகவல் தெரிவித்து மீட்க கோரிக்கை விடுத்துள்ளார். மாலத்தீவில் 11  மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கடற்கரை கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment