கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் பெரியோர்கள் சேர்ந்து எனது திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர், கணவருடன் தனிக் குடித்தனம் சென்றேன். ஆண், பெண் என தலா 1 குழந்தை உள்ளது. இருவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளேன்.
மகிழ்ச்சியாக சென்ற எங்களது இல்லற வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண் டாக மகிழ்ச்சி இல்லை. காரணம் கணவர் தினமும் தொந்தரவு செய்கிறார். இல்லறத்தில் இஷ்டம் இல்லை என்றாலும் கட்டாயப்படுத்துகிறார். பலாத்காரம் செய்கிறார். தடுத்தாலும் முடிவதில்லை.
மறுப்பு தெரிவித்தால் வெளியே சொல்லி கேவலப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தால் அவர்களும் கணவருக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
இதுகுறித்து நான் போலீசில் புகார் அளிக்க சென் றால் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். எனவே, கணவருக்கு தெரியாமல் பிள்ளை களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது போல் வந்து புகார் அளிக்கிறேன். எனது கணவரிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வேண்டும். மேலும், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி, போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்றொரு புகார்:
இதற்கிடையில் புதுக்கோட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் �கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருடன் எனக்கு திருமணம் நடந்தது. பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை என்று கூறினர். முதல் இரவுக்கு சென்றபோதுஎனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் எனது மனைவி வயதுக்கே வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டேன். அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னும் ஒரு ஆண்டுக்குள் வயதுக்கு வந்துவிடுவார். அதன்பிறகு எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று உதாசீனமாக பேசினர். எனவே, வயதுக்கு வராத பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். புகாரை படித்த போலீசார் இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment