Friday 30 March 2012

புத்திசாலி காகம் - 2012


thristy-crow-story
சென்ற வாரம் சனிக்கிழமை மதிய நேரம் ஒரு காக்கா எழாம் வகுப்பு படிக்கும் தன்மகள் காக்கா உடன் ஷாப்பிங் சென்றுவிட்டு பறந்து வீடு போய் கொண்டிருந்தன.


மகள் காக்கா தன் அம்மா காக்காவிடம் "மம்மி ஒரே தாகமா இருக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிதாம்மா " என்று கேட்டது.

"பேசாம வா!!! வீட்டுக்கு போய் குடிக்கலாம்"

" ப்ளீஸ் மம்மி!!! எனக்கு தாகமா இருக்கு தாங்க முடியல"

thirsty-crow-story"சரி கொஞ்சம் பொறு. பக்கத்தில ஒரு வீட்டு மாடியில் ஒரு கிறுக்கன் வருஷ கணக்கா தினமும் பெரிய ஜாடில கொஞ்சூண்டு தண்ணி வைப்பான் வா செல்லம் நாம அங்க போய் குடிக்கலாம் "

அந்த வீட்டை அடைந்தன

"மம்மி எப்பிடி இதை குடிக்கிறது ரொம்ப கீழ இல்ல தண்ணி இருக்கு"

"கேளு செல்லம் நம்ம எள்ளு தாத்தா காலத்தில் இருந்து சின்ன சின்ன கல்லை கொண்டுவந்து இதுல போட்டு நிரப்பி அப்புறமா தண்ணி மேல வந்தப்புறம் குடிப்போம்"

"எவளவு நேரம் ஆகும் மம்மி?"

"அஞ்சு மணி நேரம் பிடிக்கும் டாட்டர்!"

thirsty-crow-story"ஏன் மம்மி நம்ம பரம்பரையே லூசா அஞ்சுமணி நேரம் செலவழிச்சு ஒவ்வொரு கல்லா கொண்டு வர எப்பிடியும் கணக்கு போட்டா அங்கயும் இங்கயுமா 150 கி.மீ பறக்கணும் அந்த டயத்துல வேற எங்கயும் பறந்து போனா நூறு குளங்களாவது வழியில் இருக்கும் நிம்மதியா குடிச்சிட்டு போலாம் இல்லன்னா நம்ம வீட்டுக்கே போய் மினரல் வாட்டர் குடிக்கலாம். இந்த வீட்டுக்கார நன்னாரி வேற பெரிய ஜாடியா வச்சிருக்கான் பாத்தியா?"

"ஆமாண்டா செல்லம் இவளவு நாளா நான் யோசிக்கவே இல்லை வா போகலாம்"

"இரு மம்மி ஒரு வேலை பண்ணனும் இவளவு வருஷமா நம்ம பரம்பரை லூசுத்தனமா போட்ட கல்ல வச்சி இந்த வீட்டுக்காரன் நாலு வீடு கான்க்ரீட் போட்டுட்டான் கடைசியா ஒண்ணு..பண்ணலாம் "

"-------"

தாயும் மகளும் இணைந்து ஒரு பெரிய கல்லை சுமந்து உயரத்தில் இருந்து ஜாடியின் மேலே போட்டது. ஜாடி சுக்கு நூறாய் உடைந்தது.

No comments:

Post a Comment