Thursday, 29 March 2012

தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி


ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். 
எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலை யில் ஞான தாஸ் நேற்று ராஜாக்க மங்கலம் சந்திப் பில், நிற்ப தாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மரிய ரோசிலின் மற்றும் போலீ சார் ராஜாக்க மங்கலம் சென்று ஞான தாசை கைது செய்தனர். விசாரணையில் வங்கியில் இருந்து எடுத்த பணத்தை நண்பர் மூலம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ததாக போலீ சாரிடம் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஞான தாசை மாஜீஸ்திரேட் கோர்ட் 1ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 6 பேரை போலீ சார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment