Thursday, 29 March 2012

"கூடன்குளமும் கரண்ட் நாடகமும்"


வெறி பிடித்த அரசியல் சொறி நாய்களிடமும்
பண மதம் பிடித்த வெறி நாய்களிடமும்
இடமற்று போனது மனித நேயங்கள்... மனித உரிமைகள்...

கேட்டால்... நாட்டு வளர்ச்சியாம்...


உன் நாட்டின் வளர்ச்சிக்கு என்று கூறுவது...
உன் நாட்டின் வீழ்ச்சிக்கு என்பதை ஏன் உணர மறுக்கிறாய்...

உன் நாட்டின் வளர்ச்சிக்கு என்று கூறுவது...
உன் அரசியல் வாதிகளின் பதவி வெறி நாடகம் என்பதை ஏன் உணர மறுக்கிறாய்...

உன் நாட்டின் வளர்ச்சிக்கு என்று கூறுவது...
உன்னை பலி ஆடுகளாய் அந்நிய சக்திகளுக்கு விலைபேசும் வியாபாரம் என்பதை ஏன் உணர மறுக்கிறாய்...

கரண்டு இல்லை... கரண்டு இல்லை...
இது தான்... உன் கண்களுக்கு பிரச்னை ஆகா தெரிகிறது...
கூடங்குளம் திறந்தால் உனக்கு கரண்டு கிடைக்கும் என்கிற மூட நம்பிக்கையில் வாழ்கிறாய் என்பதை மறந்து விடாதே...

அரசியல் வாதிகளும்... அரசு அதிகாரிகளும் விலைபோகாமல் இருந்திருந்தால்...
அவர்கள் கடமைகளை செவ்வனே செய்திருந்தால் இந்த கரண்டு இல்லை நாடகம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை...
அதை உணர நீ மறுப்பது ஏன்????....

வெள்ளம் வந்த பின் ஆணை கட்ட முடியாது!!!
விழித்து கொள்வாயா???
உன் சுயநலம் விடுத்தது பொது நலத்திற்கு சிறிதேனும் உன் இதயத்தில் இடம் கொடுப்பாயா???

- நான்சி பிரியன்

No comments:

Post a Comment