Thursday 29 March 2012

"ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???


போரூர் அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (60). தனியார் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று மாலை ஐயப்பன் தாங்கலில் இருந்து ஆலந்தூருக்கு 54 சி பஸ்சில் சென்றுள்ளார். தனியார் மருததுவமனை பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறினர். அவர்கள் ஆண்கள் பக்கமாக வந்து, கையில் கொண்டு வந்த பெரியபையை ஜெயமணியிடம் கொடுத்தனர்.
அவர் பையை மடியில் வைத்திருந்தார். அது அவரது சட்டை பாக்கெட்டை மறைக்கிற அளவில் இருந்தது. இரு பெண்களும் அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தனர். அப்போது ஒரு பெண் ஜெயமணியின் பர்ஸை அபேஸ் செய்துள்ளார். இதை அருகில் நின்ற பயணி பார்த்து, கையும் களவுமாக பிடித் தார். அந்த பெண்களை போரூர் காவல்நிலையத¢தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மல்லிகா (45), காஞ்சிபுரத்தை சேர்ந்த ரேவதி (38) என்பது தெரிந்தது. இவர்கள் முன்பே பல திருட்டு வழக்கில் சிறைக்கு சென் றதும் தெரியவந்தது. இவர்கள் எப்போதும் ஆண்கள் இருக்கும் பக்கம் சென¢று யாரிடமாவது பையை கொடுத்துவிட்டு பேச்சுக்கொடுத்து பணத்தை அபேஸ் செய்வது வழக்கம். இவர்களை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.  

No comments:

Post a Comment