Thursday 29 March 2012

விறகு வெட்டி - 2012

முன்கதை சுருக்கம் : ஒரு விறகு வெட்டி காட்டிற்கு விறகு வெட்ட சென்று கோடரி குளத்தில் விழ .அவன் அழ ,வனதேவதை வந்து காரணம் வினவி, அவனுக்கு குளத்தில் இறங்கி தங்கம், வெள்ளி, கோடரிகளை எடுத்து அவனிடம் கேட்டது. இறுதியில் அவனது நேர்மையை பாராட்டி மூன்று கோடாரிகளையும் அவனிடமே தந்தது.  
                  
அதன் பின் : அந்த விறகு வெட்டி வீட்டிற்கு வந்து யாருக்கும் தெரியாமல் எடை போட்டு பார்த்தான். தங்க கோடரி மற்றும் வெள்ளி கோடரி தலா 7 கிலோ இருந்தது உடனே இவற்றை விற்று வீடு கட்டினான். மீதி பணத்தை வைத்து புதிதாய் கோடரி கடை துவங்கி மகிழ்ச்சியாய் வாழ்ந்தான். ஒரே ஒரு மகனை . செல்லமாய் வளர்த்து வந்தான். தனது 63 ஆம் வயதில் காலமானான்.

இவனது மகன் பெயர் ஆண்டி சிறுவயதிலேயே அதிக வசதியோடு வாழ்ந்ததால் முரட்டு தனமாக கெட்ட பழககங்கள் அனைத்தையும் பழகி  இருந்தான். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடுகளையும், விளை நிலங்களையும் அழித்து பிளாட் போட்டு விற்க துவங்கினான். 

ஒரு மனைவி, ஒரு சின்ன வீடு வைத்து கொண்டான். ஒரு கட்சியில் சேர்ந்து ஒன்றிய செயலாளர் ஆனான். வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் நல்ல நல்ல மரங்களை வெட்டி கடத்த துவங்கினான். வனம் அழிக்கப்படுவதை வனதேவதை தன் மகளுடன் கவலையோடு பார்த்து கொண்டிருந்தாள் .

சிறுவயதிலேயே தந்தையின் முன்கதையை அறிந்து இருந்தான். அதை ஏன் நாமும் செய்யகூடாது என்று பேராசை கொண்டான். சிறுவயதிலேயே அவன் தந்தை இவனை அழைத்துக்கொண்டு அந்த குளத்தை காட்டி இருந்தார். இவன் மனது அரிக்க துவங்கியது .

2012 துவக்கத்தில் ஒரு நாள் மதியவேளை யாருக்கும் சொல்லாமல் 40 kg  எடையில் ஒரு கோடாரியை செய்து வாங்கிக்கொண்டு அந்த காட்டிற்குள் வந்தான். வெகுநேரம் நடந்து ..அந்த காட்டின் மையப்பகுதியில் அமைந்த அந்த குளக்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை 3 மணி ஆகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த அவன் தன் கோடாரியை குளத்தினுள் போட்டான். சத்தம்போட்டு அழ துவங்கினான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது, யாரையும் காணோம். அங்கும் இங்கும் ஆர்வமாக பார்த்துகொண்டு விடாமல் அழுதான். நேரம் இருட்டியது. மணி 6 .30 ஒரு தேவதை தோன்றினாள். 

"மை சன் ..ஹூ ஆர் யு ? ஒய் ஆர் யு கிரயிங்?" (My Son Why are you crying?) என்று கேட்டது. இவன் பொய்யாக தான் வறுமையில் வாடும் விறகுவெட்டி என்று சொல்லி தன் கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டதாக அழுதான்.  தேவதை உடனே சரி நான் எடுத்து தருகிறேன் "டோன்ட் கிரை" (Don't Cry) என்று குளத்தில் மூழ்கி அவனது கோடாரியை எடுத்து தந்தது அதிர்ச்சியடைந்த அவன் "இல்லை நீங்கள் வழக்கமாக தங்கம், வெள்ளி, அதன்பிறகுதானே உண்மையான கோடாரியை தருவீர்கள் " என்றான். 
தேவதைக்கு மனதுக்குள் சிரித்தது. "Oh  .அது என் மம்மி (Mummy) வேலை அப்போது கோல்ட் விலை எல்லாம் குறைவு இல்லையா சரி உங்கள் கோடாரியை கொண்டு போங்கள் தயவு செய்து பச்சை மரங்களை வெட்டாதீர்கள். ஓசோனில் ஓட்டை விழுந்த கதையெல்லாம் அறிந்திருப்பீர்களே? பூமி வெப்பமாதலை தடுக்க காடுகளை அழிக்காதீர்கள் கிளம்புங்கள்" என்றது 

இவன் உடனே "இது என் கோடரி இல்லை தவறி விழுந்த எனது கோடரி தங்கத்தால் செய்யப்பட்டது. அதை எடுத்து தாருங்கள்" என்றான் 

தேவதை தெளிவாக சொன்னது "சரி உனக்கு இரண்டு வாய்ப்பு தருகிறேன் ஓன்று தங்கத்தில் ஒரு டார்ச் லைட் (Torch Light) அல்லது தங்கத்தில் உனது 40 kg கோடரி. எதாக இருந்தாலும் நீ விடியும் முன் காட்டை விட்டு செல்லவேண்டும் இல்லை என்றால் கல்லாக மாறிவிடும்"

"கோடரி போதும்" என்றான் 

தேவதை குளத்தில் மூழ்கி எடுத்து கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் இருட்டில் பயம் கவ்வியது. நடக்க துவங்கினா. 

மறுநாள் காலை குட்டி தேவதை தன் தாயிடம் அன்றைய நாளிதழ் செய்தியை காட்டியது "காட்டில் ஒன்றிய செயலாளர் ஆண்டி பிணம் பாம்பு தீண்டி மரணம்". தாய் தேவதை தன் மகளை அர்த்தத்தோடு பார்த்தது

3 comments:

  1. the story is simply beautiful with thoughts...

    wishes for many more stories

    thanks..

    ReplyDelete
  2. எனது ..நல்ல கட்டுரைகளையும் .உங்களுக்கு பிடித்தவற்றை ..பயன்படுத்தவும் .....தங்கள் sms பகுதியில் ..உள்ள ..புதிர் கணக்கிற்கான விடை -143547 ...மிக்க நன்றி ..அழகான வடிவமைப்பு

    ReplyDelete