Wednesday, 28 March 2012

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!


சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம்தேதி தனது பெற்றோரை பார்க்கவேண்டும் எனக்கூறிவிட்டு குழந்தையுடன் சென்ற சோனி தாய்வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் மதனப்பள்ளி முதலாவது போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சோனி தனது பெற்றோருக்கு போனில் பேசினார். ‘நான் மோசினுடன் திருமணம் செய்துகொள்ளாமல் டெல்லியில் குடும்பம் நடத்துகிறேன். என்னிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசின் விற்றுவிட்டார். செலவுக்கு பணம் வேண்டும் எனக்கேட்டு சித்ரவதை செய்கிறார். எனவே எனக்கு மணியார்டர் செய்யுங்கள்’ எனக்கூறினார்.
இதுகுறித்து போலீசாருக்கு சோனியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் டெல்லி சென்று மோசின், சோனி மற்றும் குழந்தையை மீட்டு வந்தனர். போலீஸ் நிலையத்தில் நேற்று விசாரணை நடந்தது.
அப்போது சோனி, மோசினுடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் மோசின், ‘எனக்கு சோனி தேவையில்லை’ என தெரிவித்தார். இதனால் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதனிடையே கணவர் நாசீரிடம் சோனியை ஏற்கும்படி போலீசார் கூறினர்.
ஆனால் அவர், ‘வேறு ஒருவருடன் 7 மாதங்கள் குடித்தனம் நடத்திய அவள் இனி எனக்கு தேவையில்லை, அவர் விரும்பினால் குழந்தையை என்னிடம் தரட்டும், இல்லையென்றால் கொண்டு செல்லட்டும்’ என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். 
கள்ளக்காதலன் கைவிட்ட நிலையில், கட்டிய கணவரும் ஏற்காததால் வழி தெரியாமல் தவித்த சோனி,போலீசில் கொடுத்துள்ள புகாரில் ‘மோசின் என்னை கடத்திச்சென்று குடும்பம் நடத்தி சித்ரவதை செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், மோசின் மீது 4 வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். (tamilmurasu)

No comments:

Post a Comment