Friday, 30 March 2012

படிப்பு முடியவில்லை : ரூ 1.34 கோடி சம்பளம் : பேஸ்புக்

சமூக இணையதளமான பேஸ்புக், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவருக்கு ரூ 1.34 கோடி சம்பளம் தர ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சக்கரவர்த்தி கூறியதாவது:
உலக புகழ்பெற்ற பேஸ்புக், எங்கள் நிறுவனத்தில் பி.டெக். (சாப்ட்வேர்) இறுதியாண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது. பாதுகாப்பு கருதி அந்த மாணவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படுகிறது. பேஸ்புக் அந்த மாணவருக்கு கடந்த 27ம் தேதி பணி ஆணையை அனுப்பி உள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ 1.34 கோடி சம்பளம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. படிப்பை முடித்தபிறகு கலிபோர்னியாவில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இ&மெயில் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணியை துவங்கியது. அதன்பிறகு, 9 சுற்றுகளாக தொலைபேசியில் நேர்முகத்தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment