"டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய தாலுகாவுக்கு 2 உதவி மையங்கள் அமைக்கப்படும்" என்று அதன் தலைவர் நட்ராஜ் கூறினார்.
தமிழக அரசு பணிகளில் பணியாளர்களை நியமிப்பதில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஓராண்டுக்குரிய தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது, 12 அறிவிப்புகள் மூலம் 14 பதவிகளில் காலியாக உள்ள 152 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை போட் டோ மற்றும் கையொப்பத்தினை தேர்வாணையத்தின் இணையதளத்தில் டவுன்லோடு செய்து பதிவு செய்யலாம். பதிவு கட்டணமாக ரூ 50 செலுத்தி இணையதளம் வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு பதிவு செல்லுப்படியாகும். தமிழகத்தில் உள்ள 500 தபால் நிலையங்கள், 800 இந்தியன் வங்கி கிளைகள், இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பதிவு கட்டணத்தை செலுத்தலாம். பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும்.
அந்த பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனியாக இணையவழி விண்ணப்பத்தை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களை பதிவு செய்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு பிரத்யேக குறியீடு, நுழைவு குறியீடு கொடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்புகள் இமெயில், எஸ்எம்எஸ் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். பதிவு செய்தவர்கள் கல்வி தகுதி போன்றவற்றை மட்டும் மாற்றம் செய்ய முடியும். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்ட ணம் செலுத்த தேவையில்லை. தேர்வு கட்டணத் தை மட்டும் செலுத்தினால் போதும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வசதிக்காக லேப்டாப், இணையதள வசதி, தடையில்லா மின்சாரம் வசதியுடன் கூடிய 500 உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கு 2 மையங்கள் என்ற அடிப்படையில் உதவி மையங்கள் திறக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் உதவி மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பங்களை பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் உதவி மையங் களை அணுகலாம். இந்த வசதிக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே பயன்படுத்தி கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் தேர்வாணையம் இணையதளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில், தேர்வாணைய செயல்பாடு, விண்ணப்பதாரர் பகுதி, அரசு ஊழியர்கள் துறை சார்ந்த தேர்வு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
விண்ணப்பதாரர்கள் பக்கத்தில் நிரந்தர பதிவு, அறிவிப்புகள், இணையதளம்வழி விண்ணப்பம், விதிமுறைகள், ஆண்டு திட்டம், பாடத்திட்டம், முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், விடைதொகுப்புகள், தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளம் வாயிலாகவும் தேர்வாணையத்துடன் இணைந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நட்ராஜ் கூறினார். பேட்டியின்போது, டிஎன்பிஎஸ்சி செயலாளர் உதயசந்திரன் உடன் இருந் தார். டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpsceams.net என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment