சென்னை நேரு கிரிக்கெட் மைதானத்தில் I.P.L சீசன் களை கட்டியிருந்தது அன்று அரை இறுதி போட்டி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட இருந்தது.
இரண்டு அணி தொப்பிகளை நான்கு பெட்டிகளில் நிரப்பி கொண்டு ஓம்னி காரில் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.தொப்பி வியாபாரி தொல்காப்பியன் .
வாகனம் வேளச்சேரி பகுதியை அடைந்த போது தொல்காப்பியனுக்கு நம்பர் ஒன் வந்தது கிளம்பும் போது மனைவி கொடுத்த பெரிய டம்ளர் மோர் குடித்தது நினைவுக்கு வந்தது.
எரிச்சலோடு வண்டியை ஆள் அரவம் இல்லாத இடத்தில நிறுத்தினான். ஒரு மதில் சுவர் பகுதியில் மூடப்பட்டிருந்த வாயில் அருகே சென்றான். "இங்கு சிறுநீர் கழிக்காதீர்" என்று எழுதி இருந்தது. அந்த இடத்தில் மிக சரியாக தன் கடமையை செய்து முடித்து "அதுதானே நம் மரபு". ஆசுவாசமாக ஒரு கோல்ட் பில்ட்டர் (Gold Filter) புகைத்து வாகனம் அருகே வந்தான்.
ஓட்டுனர் இருக்கை அருகே கண்ணாடியை ஏற்றி விட மறந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தான். உள்ளே ஒரு பெட்டி உடைக்கப்பட்டு 50 தொப்பிகளும் திருடப்பட்டிருப்பதை கவனித்து அதிர்ந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தபோது அருகில் ஒரு சுவரில் வரிசையாக நிறைய குரங்குகள் தலையில் தொப்பிகளோடு இருந்தது தெரிந்தது.
எச்சரிக்கையோடு முன்னால் போய் "கிவ் மை காப்ஸ் ப்ளீஸ்" (Give my caps please) என்று கைகளை விரித்து கேட்டான் அவையும் இவனை பார்த்து கையை விரித்தன.
இவனுக்கு இவன் தாத்தா முன்பு செய்தது நியாபகம் வந்தது வாகனம் அருகே வந்து இன்னொரு பெட்டியை திறந்து ஒரு தொப்பியை எடுத்துக்கொண்டு வாகனத்தை சரியாக மூடி விட்டு குரங்குகளின் முன் வந்தான்.
தொப்பியை வலது பக்கம் அசைத்தான். அவைகளும் அசைத்தன. இடது பக்கம் நீட்டினான். குரங்குகளும் நீட்டின. உயரத்தில் போட்டு பிடித்தான் அவையும் பிடித்தன.
முன்னால் தூக்கி வீசினான் தொப்பி கிடைக்காத ஒரே ஒரு குட்டி குரங்கு மட்டும் தாவி வந்து எடுத்து சென்றது மற்ற குரங்குகள் கை தட்டின.
ஒரு குரங்கு குட்டி குரங்கிடம் சொன்னது "பாத்தியா! சொன்னேன்ல அவன் இப்படி செய்வான். உனக்கும் தொப்பி கிடைக்கும்னு. ஏமாந்துகிட்டே இருக்க நாம என்ன மனுஷங்களா?"
No comments:
Post a Comment