Monday, 2 April 2012

போலீசாருக்கு போன் போட்டு "ஏப்ரல் பூல்" : எவ்வாறு???

ஓடையில் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு போன் போட்டு மர்ம நபர் ஏப்ரல் பூல் செய்தார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தோவாளையில் இருந்து மாதவலாயம் செல்லும் வழியில் உப்பாற்று ஓடை அருகே சாக்கு மூட்டையில் ஆண்பிணம் கிடப்பதாகவும், புல் அறுக்க அப்பகுதிக்குச் சென்ற பெண் இதைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவித்தார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் வடசேரி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஆரல்வாய்மொழி எஸ்.ஐ. ரகுராஜன், கோட்டார் எஸ்.ஐ. சுஜித் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அவர்கள் சோதனை நடத்திய போது, துர்நாற்றத்துடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்ததை பார்த்தனர். அதை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் கோழிக்கழிவுகள் மட்டுமே இருந்தன. பிணத்தை காணாததால் போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். பின்னர் தான் ஏப்ரல் 1 என்பது போலீசாருக்கு நினைவு வந்தது. யாரோ மர்மநபர் தங்களை ஏப்ரல் பூல் செய்து ஏமாற்றியதை எண்ணி நொந்தபடி போலீசார் திரும்பி சென்றனர்.
ஏப்ரல் முட்டாள் எப்படி உருவானது
முக நூலில் படித்தது : ஏப்ரல் ஒன்று வருடப் பிறப்பாக இருந்தது ஒரு காலத்தில். அது ஜனவரி ஒன்றாக போப் அங்கீகரித்தது தெரியாமல் ஏப்ரல் ஒன்றை வருடத் தொடக்கமாகக் கொண்டாடிய அறியாத மக்கள் முதன் முதலாக ஏப்ரல் முட்டாள்களாக அழைக்கப்பட்டார்கள். வேணும்னா இப்போதைக்கு சித்திரை ஒன்றையும், தை ஒன்றையும் முட்டாள்கள் தினமா மாறி மாறிக் கொண்டாடலாம்.   

No comments:

Post a Comment