Monday, 2 April 2012

6 மாநிலங்களில் 1000 ஏடிஎம் : தபால் துறை நவீனப்படுத்தும் திட்டம்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் தபால் துறை சார்பில் 1000 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படுகின்றன.  இது பற்றி, டெல்லியில் தபால் துறை செயலாளர் மஞ்சுளா பாராசேர் கூறியதாவது:
தபால் துறையை நவீனப்படுத்த ரூ 1,877.2 கோடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அசாம் ஆகிய 6 மாநிலங்களில் தபால் துறை அலுவலகங்களை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். இம்மாநிலங்களில் மொத்தம் 1000 ஏடிஎம் மையங்களை அமைக்கவுள்ளோம். படிப்படியாக அமைக்கப்படும் இந்த மையங்கள் மூலம், மக்களுக்கு வங்கி சேவை அளிக்கிறோம்.
நவீனப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி, சிபி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களை அஞ்சல் துறை தேர்வு செய்துள்ளது. இந்த திட்டங்கள், முன்னோடி திட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
தற்போது 24,000 தபால் அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
இவ்வாறு மஞ்சுளா தெரிவித்தார்.

No comments:

Post a Comment