சென்னை இளம்பெண் மற்றும் சேல்ஸ் கேர்ள் ஆகியோரின் நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மிரட்டிய 2 காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்.
ஐதராபாத் ராம் நகரை சேர்ந்தவர் விஷால் மடிபல்லி (24). அமெரிக்காவில் எம்.எஸ் படித்து வந்தார். அப்போது இன்டர்நெட் மூலம் பலருடன் தொடர்பு கொண்டார். இதில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி நெட்டில் சாட்டிங் செய்தனர். விஷால் மீது முழு நம்பிக்கை வந்தவுடன் தனது ஆன்லைன் பாஸ்வேர்டை அவருக்கு தந்தார். இதை வைத்து அப்பெண்ணை பற்றிய எல்லா தகவல்களையும் விஷால் சேகரித்தார். இதற்கிடையில், ‘ஸ்கைப்’ வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது விஷால் ஆசை வார்த்தைகள் கூறினார்.
அதை நம்பி அந்த பெண் வீடியோ கேமரா முன்பு நிர்வாண போஸ் தந்தார். இதை ரகசிய கேமராவில் விஷால் பதிவு செய்துகொண்டார். பின்னர் அப்பெண்ணை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். அதிர்ச்சி அடைந்த அவர், ‘தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். மறுத்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார். பயந்துபோன விஷால் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.
அதை நம்பி அந்த பெண் வீடியோ கேமரா முன்பு நிர்வாண போஸ் தந்தார். இதை ரகசிய கேமராவில் விஷால் பதிவு செய்துகொண்டார். பின்னர் அப்பெண்ணை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். அதிர்ச்சி அடைந்த அவர், ‘தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். மறுத்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார். பயந்துபோன விஷால் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் ஐதராபாத் வந்தார் விஷால். அவரை இளம்பெண் சந்தித்தார். அப்போது ஏற்கனவே பல பெண்களுடன் விஷால் மன்மதலீலை நடத்திய விவரம் தெரியவந்தது. இதையடுத்து அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இதில் கோபம் அடைந்த விஷால் அவரை பழிவாங்க முடிவு செய்தார். அவரது நிர்வாண போட்டோவை நெட்டில் வெளியிட்டதுடன் அதை அவரது கல்லூரி தோழிகளுக்கும் அனுப்பினார். அதிர்ச்சி அடைந்த பெண், விஷால் மீது கடந்த 12&ம் தேதி ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை செய்து விஷாலை கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்டு லேப்டாப், நிர்வாண படங்கள் அடங்கிய ஏராளமான டிவிடிக்களை கைப்பற்றினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்தனர்.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் தனியார் வங்கி ஊழியர் சுரேந்தர் (25) என்ற வாலிபர் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக பணிபுரிந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகினார். ஆசை வார்த்தை கூறி தனிமையில் சந்தித்தவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தார். பின்னர் அதைக்காட்டி அப்பெண்ணை பிளாக்மெயில் செய்தார். அவரிடமிருந்து வெற்று செக் வாங்கி போலி கையெழுத்து போட்டு ரூ.1.2 லட்சம் எடுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறுமாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சுரேந்தரை சந்திப்பதை தவிர்த்தார். கோபம் அடைந்த சுரேந்தர் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதுடன் மாப்பிள்ளை வீட்டாருக்கும் அனுப்பி வைத்தார்.
இதனால் திருமணம் ரத்தானது. இதுபற்றி பவுன்பாளை போலீசில் புகார் செய்தார் சேல்ஸ் கேர்ள். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கே.சட்டய்யா, சுரேந்தரை கைது செய்தார்.
No comments:
Post a Comment