Saturday 21 April 2012

ஆபாச நடனம் : ஐகோர்ட் உத்தரவு : பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3-ல் சென்னையில் துவங்கியது. அன்று இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனம் ஆடினர். நடனநிகழ்ச்சிகளின் போது பல போலீஸ் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.
இதை டிவி, பத்திரிகைகளில் பார்த்து பொதுமக்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனத்தை போலீசார் தடுக்காதது சட்டவிரோதம். இதற்காக இந்திய நடிகர்கள், பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி ஏ.செல்வம் விசாரித்தார். தென் மண்டல ஐ.ஜி.யின் பதில் மனுவை அரசு வக்கீல் தாக்கல் செய்தார். அதில், ‘ஐபிஎல் துவக்க விழா நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்துள்ளது. நிகழ்ச்சியை மதுரை மக்கள் ஊடகங்கள் மூலம் மட்டுமே பார்த்துள்ளனர். இது குறித்து புகார் அளிக்க முகாந்திரம் கிடையாது. மனுதாரரின் புகார் மீது மதுரையில் நடவடிக்கை எடுக்க முடியாது. சுய விளம்பரத்திற்காக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் புகாரை உரிய விசாரணைக்காக, கூடுதல் டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மனுவை பைசல் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment