Sunday 13 May 2012

ஜூன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil-Nadu-SSLC-Exam-rsultsதமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. அதில் 10,312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் முறையாக இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வு நடந்தது. இந்த முறையின் கீழ், 19,574 மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி முடிவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி கடந்த 11ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, கம்ப்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜூன் 4ம் தேதி, 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி வெளியிட்ட அறிக்கையில், “முதல்வரின் ஆணைப்படி ஏப்ரல் 2012ல் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment